ஹரி தாஸ் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொன்னால் மிகை ஆகாது..வழக்கு எண் 16/9 திரைப்படத்துக்கு பிறகு ஒரு அருமையான திரைபடத்தை பார்த்த மன நிறைவு கிடைத்தது.ஒரு ஆண் குழந்தையின் தந்தையாக பார்க்கும் போது திரை கதையுடன் மனமும் ஒத்து பார்க்க முடிந்தது..தந்தை மகன் பேசும் காட்சிகள் திரையில் ஒரு கவிதையாக தோன்றியது .கிஷோர் மிக நன்றாக நடித்து இருந்தார்...நவீன தொழில் நுட்பம் பெரிய பட்ஜெட்டில் கனவு டூயட் பாடல்கள் மையமாக கொண்டு எடுக்கும் திரைபடங்களில் நடுவில் இது போன்ற யதார்த்தமான வாழும் காலத்திற்கு ஏற்ற படங்கள் இன்னும் தமிழில் நிறைய வர வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் காலம் தாமதம் ஆனாலும் பட குழுவினருக்கு என்னால் ஆன பாராட்டு பதிவு. தேசிய விருதுக்கு அனுப்ப பட்டதா என்று தெரிய வில்லை..அங்காடி தெருவுக்கு தேசிய விருது கிடைக்காதது போல இந்த படத்துக்கும் நழுவி சென்றதா என்று தெரிய வில்லை..ஆனால் இது நல்ல திரைப்படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது .நன்றி.
Monday, March 25, 2013
Sunday, March 10, 2013
என்றும் வாழும் ஒரு தமிழ் புரட்சியாளர்.
மென் பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தவுடன் மிக அதிக பக்கங்கள் கொண்ட புத்தங்கங்களை படிக்கும் பழக்கம் குறைந்தது.. மென் பொருள் ஜாவா சம்பத்தப்பட்ட புத்தகங்களை படிப்பதோடு சரி. பொது அறிவை தேட நாளிதழ்களும் ஆனந்த விகடன் பத்திரிகையோடு தமிழ் பைபிள் என் தமிழ் வாசிப்பு இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகத்தை படித்தேன் . "பிரபாரகரன் ஒரு வாழ்க்கை" . எழுத்தாளர் "செல்லமுத்து குப்புசாமி". இலங்கையில் இன படு கொலை நடந்த சமயம் நான் நண்பர்களின் விவாதத்திலும் facebook பதிவுகளிலும் பார்த்து எனக்குள் எழுந்த தமிழ் உணர்வுகளின் எழுச்சியாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழக்கையை இன்னும் அறிந்து கொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகள் அஹிம்சை வழியில் ஈழதில் நடந்த அற போராட்டதில் யாழ்ப்பாண தமிழர்கள் சிங்கள வெறியர்களால் நசுக்கப்பட்டனர். ஆங்கிலயர்கள் கூட அந்த அளவுக்கு இந்தியாவில் கொடுமைகள் செய்ய வில்லை..அந்த சமயத்தில்தான் சிறுவர் பிர்பக்கரனுக்கு உலகெங்கும் நடந்த புரட்சி வரலாறு டியூஷன் ஆசிரியர் மூலம் விதைக்க பட்டது...இன வெறிக்கு எதிராக துப்பாக்கி எடுத்தார்..ஒரு ராணுவத்தையே உருவாக்கினார் MGR இந்திரா காந்தி போன்றவர்கள் ஆயுத உதவி செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.இந்திரா இறந்த பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆக இருந்த போது இந்திய அரசின் போக்கு மாறியது..அங்கு வருவது போல இந்தியாவிலும் தமிழர்கள் தனி நாடு கேட்பார்களோ என்ற பயம் வந்தது.அதன் கோர முடிவுதான் அமைதி படை..சில தலைவர்களின் கொலை பின்னணி.ராஜீவ் கொலைக்கு பிறகு தமிழகத்திலும் இவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி இவர்களின் வாழ்வில் பெரும் சேதத்தை ஆற்றியது.இவர்களே மக்களின் நிவாரண பணிகளை செய்தனர்..இறுதியில் இப்போது இருக்கும் ராஜபட்சே என்ற அரக்கனின் ராணுவத்தை கொண்டு இனம் பேரழிவுக்கு ஆளாகியது.. பிரபல பத்திரிகையாளர் அனிதா அவர்கள் இவரை பேட்டி எடுக்க சென்ற போது ஒரு இரவு தங்கி இருந்தார்.. இந்தியா திரும்பி வந்தவுடன் அவர் சொல்லியது "இந்திய ராணுவத்திடமும் டெல்லியிலும் இல்லாத பெண் பாதுகாப்பை ஒழுக்கத்தை விடுதலை புலிகளிடம் கண்டேன்.". பெண்கள் பலர் இருந்தாலும் ஒரு ஒழுக்கமான அமைப்பாக காத்து வந்ததார் என்கிறது வரலாறு. சாதி மதம் அவர்கள் பார்க்க வில்லை. பிரபாகர் மதி தம்பதியினர் தன் முதல் பயனுக்கு இறந்து போன போராளி கிறிஸ்தவர் பெயர் சார்லஸ் என்று வைத்தார்கள் . புலிகளின ஒவ்வொரு தாக்குதலும் எதிரிகளின் பதில் தாக்குதலாகவே இருந்தது. அமைதி முறையில் சந்திப்புக்கள் நடந்த போதெல்லாம் அமைதியாகவே பேச முன் வந்தனர் புலிகள். எப்படி இங்கு வாஞ்சி நாதன் பகத்சிங் நேதாஜி விடுதலை போராட்டதிற்கு ஆயுதம் எடுத்தார்களோ அவ்வாறுதான் இவர்கள் போராட்டமும்..இவர்களை இந்திய எப்படி பயங்கரவாதி என்று சொல்லாதோ அது போலத்தான் தமிழர்களும் இவர்களை அப்படி சொல்ல மாட்டார்கள். சொந்த நலனை கூட கருதாமல் ஒரே இலட்சியத்துடன் போராடி உயிரை துறந்த புலிகளை மாமனிதர்களாக இந்த புத்தகம் படித்தவுடன் பார்க்க தொடங்கியது. இங்கு தமிழ் என்று சொல்லி ஒரு கூட்டம் பணத் திமிரிலும் ஊழலிலும் ஆட்டம் போட்ட போடுதான் அங்கு தம் இனம் காக்க பலர் உயிர் துறந்தனர். இந்த புத்தகத்தில் இரண்டு தமிழ் தலைவர்கள் பற்றி பாராட்டி எழுதினார் என்றால் அவர்களில் MGR வைகோ இருவரும்தான். தொடக்க காலத்தில் ஆயுத உதவிகள் செய்தவர் ஒருவர் இன்னொருவர் பாராளு மன்ற கூட்டங்களில் அவர்களுக்காக இந்திய அரசிடம் போராடியவர். நெடு மாறன் அவர்களின் தொடக்க காலத்தில் இருந்து ஆதரவு தந்த தலைவர் ஆவார் . சீமான் இங்கு மக்களிடையே விழிபுனர்வுகளை ஏற்படுதியடையும மறுக்க முடியாது.. அங்கு இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்த பெரிய இன படுகொலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.. நம் மொழி பேசும் மக்கள்.தமிழ் வளர்ப்போம் என்று சொல்லி தமிழ் பேசும் மக்களை அழித்தல்; அழிக்க துணை இருத்தல் எவ்வளவு துரோகம். இனி மேல் நாம் சிந்திப்போம். இவர்களுக்கு இனி மேல் வரும் தேர்தல்களிலும் பாடம் புகட்டுவோம். இலங்கை தமிழருக்காக நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். நாம் எங்கு இருந்தாலும் தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் பேணி வளர்ப்போம். நம் தலை முறைகள் தமிழ் மொழியே பேசட்டும்.அறிவியல் புத்தங்கங்கள் தமிழில் மொழி பெயர்போம்..தமிழ் இருந்தால்தான் நம் பண்பாடு நம்மில் இருக்கும். அறிவியல் மட்டும் மனித வாழ்வை மேம்படுட்ட முடியாது...வாழ்க தமிழ்!!!வளர்க மனித நேயம்!!!என்னால் முடிந்த ஒரு சிறு பதிவு என் இணைய நண்பர்களுக்காக...
Subscribe to:
Posts (Atom)