Friday, August 13, 2010

சுதந்திர தினம்

சுதந்திர தினம்


தனியார் தொலைகாட்சிகள் புதிய படங்களையும் நடிகர் நடிகைகள் பற்றியும் போட்டிபோட்டுஒளிபரப்புகின்றன.. கைபேசி நிறுவனகளின் recharge offers ...என பல வகைகளில் வணிக மயமான நாள்.. எனக்கு என் பள்ளி பருவ நாட்கள் சிந்தனைகள் ..பள்ளியில் சுதந்திர தின விழா முடிந்து வீட்டிறகு வந்தவுடன் நண்பர்கள் சேர்ந்து பக்கத்தில் உள்ள சின்ன இடத்தில் கம்பு வூன்றி கொடி பறக்க விடும் நாட்களை நினவில் வைத்து அந்த சமயத்துல இருந்த தேச பற்று இன்று என்னில் காணமல் போய் விடததோனு நினைகிறேன்...
நண்பனுக்கு போன் அடிதனே..."இன்னிக்கு ப்ராஜெக்ட் ரிலீஸ் மச்சான்..நோ freedom டு மீ " ..
அயன் பண்ணின துணிகளை வாங்க போனனே ...அயன் பண்ற வயது முடித்த ஒரு பெரியவர் " என்ன தம்பி ...அன்னிக்கு வெள்ளக்கரங்களுக்கு அடிமையா இருந்தோம்..இன்னிக்கு அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எங்கள மாதிரி லோ மிடில் கிளாஸ் எல்லாம் அடிமைய இருக்கோம் " அவர் சொல்வதில் நியாயம் ...இன்று ஒரு தனி மனிதன் பல விசயங்களில் அடிமையாக மாறுகிறான் என்பது உணமைதான் .. பணமும் அதிகாரமும் சர்வாதிகாரியாக ...

















இயக்குனர்
சேரன் சில வருடங்களுக்கு முன் இயக்கிய தேசிய கீதம் படத்தில் வருவது போல நிறைய பேருக்கு அழைப்பு கொடுத்ததும் அன்று ஒரு நாளாவது கொடி வணக்கம் செய்ய இன்று நேரம் இல்லாத அளவுக்கு அவசர உலகில் இருக்கிறோம்..குறைந்தது விடுதலை போரட்ட தியாகிகளை நினைத்து பார்க்க இன்றைய மீடியாக்கள் வழி வகை செய்ய வில்லை... நல்ல வேலை நான் புதிதாக சேர்ந்த நிறுவனத்தில் கொடி வணக்கம் இருந்தது..முன் பனி புரிந்த நிறுவனத்தில் கடந்த வருடம் இது போல் இல்லை... தனியார் நிறுவனங்கள் எல்லாம் பள்ளி கல்லூரி போல கொடி வணக்கம் தேசிய பண்டிகைகளை கொடி வணக்கம் செலுத்த முன் வரவேண்டும்.. இல்லாவிடில் வரும் தலை முறை தொலைகாட்சிகளில் அரை குறை ஆடையுடன் நடிகை கொடுக்கும் பேட்டியை பார்த்து இதுதான் சுதந்திரம் என நினைக்க் கூடும்...

பாரதி எழுதிய கவிதை வரிகளுடன் இந்த சின்ன கட்டுரையை முடிக்கிறேன்


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) 1

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத) 2

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்


வாழ்க பாரதம்....வளர்க நம் ஒற்றுமை..










1 comment:

  1. அருமையாக கூறினீர்கள் அண்ணா !!!!!
    இன்று பெரும்பாலான மக்களிடம் நாட்டு பற்று காணப்படுவதில்லை
    நடிகைகள்/நடிகர்கள் பற்றுதான் காணப்படுகிறது.

    ReplyDelete